வி.மைக்கல் கொலின் (தொகுப்பாசிரியர்). கனடா: தாய்வீடு பதிப்பகம், Post Box 63581,Woodside Square, 1571, Sandhurst Cir., Toronto, Ontario M1V 1V0, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-0-9947911-2-2.
கனடாவிலிருந்து வெளிவரும் மாத இதழான தாய்வீடு, உலகளாவிய ஈழத்தமிழரின் ஆக்கத்திறன்களையும் வெளிக்கொண்டு வந்து பதிவுசெய்யும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. திருமதி நாகேஸ்வரி திருநாவுக்கரசு நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற சிறுகதைகளின் தொகுப்பே இந்நூலாகும். போட்டியின் நடுவர்களாக பேராசிரியர் செ.யோகராசா, திரு. அ.ச.பாய்வா, திரு. வி.மைக்கல் கொலின் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். இந்நூலில் முதற்பரிசுக் கதையான மயானபூமி (சந்திரகாந்தா முருகானந்தன், கொழும்பு), இரண்டாம் பரிசுக் கதையான ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது (வசந்தன் மகேஸ்வரன், கனடா), மூன்றாவது பரிசுக்கதையான ஓர் ஆறு வழிபிரித்தோடுகிறது (ராமேஸ்வரன் சோமசுந்தரம், கனடா) ஆகியவற்றுடன் ஆறுதல்பரிசு பெற்ற கன்னி விதவை (முகில் வண்ணன், கல்முனை), புத்தங் சரணம் கச்சாமி (ராஜீவ் காந்தி, ஹாலிஎல), சவம் (சிலாவத்தை கிருஷ்ணராஜா, கொழும்பு), தொலைக்கப்பட்டவள் (பொ.புஷ்பராஜு, கொழும்பு), அதிர்ஷ்டம் (கே.எம்.எம்.இக்பால், கிண்ணியா), ஞானப்பழம் (கீர்த்திசிங்கம் குமரேஸ்வரன், லண்டன்), நடக்காது ஆனால் நடக்கும் (ராமேஸ்வரன் சோமசுந்தரம், கனடா) ஆகிய கதைகளுமாக மொத்தம் பத்துக் கதைகள் இடம்பெற்றுள்ளன.