13763 வயது பதினாறு.

மனுவல் ஜேசுதாசன். கனடா: மனுவல் ஜேசுதாசன், 80, Corporate Drive, Suite 210, Scarborough, Ontario, M1H 3G5, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கனடா: குவாலிற்றி பிரின்டிங்).

xxiii, 88 பக்கம், விலை: கனேடிய டொலர் 10.00, அளவு: 21×13.5 சமீ., ISBN: 0-9782676-0-5.

கனடாவில் சட்டத்தரணியாகப் பணியாற்றும் இவ்விலக்கியவாதி, முன்னர் தொன்னூறு நாட்களுள் என்ற நாவலை 1999இல் எழுதி வழங்கியவர். வயது பதினாறு அவரது சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இக்கதைகள் யாவும் ஒன்ராரியோ மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலுமுள்ள நீதிமன்றங்களில் மக்களும், சட்டத்தரணிகளும் தங்கியிருக்கும் பகுதிகளில் வழக்குகளுக்காக காத்திருந்த சமயங்களில் எழுதப்பட்டவை. கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் சமூகத்தில் வியாபித்திருக்கும் சமூக அனர்த்தங்களையும், அவை ஏற்படுத்திய சட்ட விளைவுகளையும் இக்கதைகள் பேசுகின்றன. சந்திப்பு, வயது பதினாறு, மருமகள், நம்ப முடியவில்லை, என் கண்மணி, முன்னாள் கணவன் மனைவி, நினைவெல்லாம், நிராகரிப்பு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49614. யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 10295).

ஏனைய பதிவுகள்