N.A. தீரன். (இயற்பெயர்: R.M.நௌஷாத்). கல்முனை: புகவம் வெளியீடு, இல. 1, பிரதான வீதி, சாய்ந்தமருது 01, 1வது பதிப்பு, மே 2000. (கல்முனை: அன் நூல் கிராப்பிக் ஓப்செட்).
x, 74 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 955-8417-00-9.
இந்நூலில் நௌஷாத்தின் எட்டுச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அணிலே அணிலே ஓடிவா (இதயம், 1997), நல்லதொரு துரோகம் (கீதம் நான்காவது ஆண்டு மலர், 1999), மலர்வு-உதிர்வு (கீதம் மூன்றாவது ஆண்டு மலர், 1998), நுஸ்ரீஓம் (தினக்குரல், 1998), சாந்தி (சிறிபாலபுர மாத்தயா, 1990), கனவுப் பூமி (சரிநிகர், 1995), ஸீனத் (மின்னல், 1986), இலகிமா (தினக்குரல், 1999) ஆகிய தலைப்புகளில் இவை 1986-1999 காலகட்டங்களில் எழுதிப் பிரசுரமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 024170).