முருகேசு தம்பிப்பிள்ளை. மட்டக்களப்பு: கலாபூஷணம் முருகேசு தம்பிப்பிள்ளை, குருமண்வெளி, 1வது பதிப்பு, 2017. (களுதாவளை: மாருதி அச்சகம்).
(2), 164 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41533-2-5.
இச்சிறுகதைத் தொகுப்பு நூலில் வாழப்பிறந்தவள், விதியின் கொடுமை, இவள் ஒரு புதுமைப்பெண், உதிர்ந்த மலர்கள், ஒரு காதற் கொலை, இரத்த உறவு, இதய சங்கமம், ஏமாற்றம், உபகாரம், சுவீகாரம், தலைவிதி, ஒன்றுபட்ட உள்ளங்கள், அற்புதக் குழந்தை, இதயக் கதவுகள் திறந்தன, துணையைத் தேடி ஆகிய 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் முருகேசு தம்பிப்பிள்ளை மட்டக்களப்பின் மகிழூர்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குருமண்வெளியில் வாழ்ந்து வருகின்றார். 36 வருடம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் டிப்ளோமா பட்டம் பெற்ற கலைப்பட்டதாரியுமாவார். வெற்றித் திருமகன் என்ற இலக்கிய நூலும், மனம் போல் வாழ்வு என்ற நாடகத் தொகுப்பும் இவரால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.