13767 வானம்பாடி: போர்க்கால வாழ்வியல் பதிவுகள்-பகுதி 01.

வெற்றிச்செல்வி (தொகுப்பாசிரியர்). மன்னார்: குருவி வெளியீட்டகம், மாற்றுத்திறனாளி மாதர்களின் அமைப்பு, Women’s Organisation Working on Disability, WOWD, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). இந்நூலில் தாமரை (பிரியா), மேகலை (மேகலை, வெற்றிச்செல்வி), பம்பைமடு (அருவி), அடம்பன் நினைவுகள் (பெனடிக்ரா), அடைக்கலம் தந்த வீடுகள் (ஜெனா), தோழமையின் தொடர்ச்சி (பிரபா அன்பு), இந்திரா (சுதா, வெற்றிச்செல்வி), களமும் நினைவும் (சந்தனா), நதி (வெற்றிச்செல்வி), சாருமதி (வாசனா), நினைவுச் சுமைகள் (அகமொழி), டயறிக் குறிப்புகள் (ஆதி) ஆகிய பன்னிரண்டு சிறுகதைகள் போர்க்கால வாழ்வியல் பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. இந்தப் பெண்களின் குரல்கள் போர்க்காலம் மற்றும் போருக்குப் பின்னரான ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலைப் பதிவாக்கியுள்ளன. தமது உள்ளக்கிடக்கைகளை எழுத்தின் வழியாக வெளிப்படுத்துவதன் மூலம் மனதின் சுமைகளை இறக்கிவைக்க முனைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதையும் போருக்குப் பின்னரான புதிய வாழ்வியலில் ஊறித்திளைத்திருக்கும் மானிடத்தின் மனக்கதவைத் தட்டிச்செல்கின்றன. பல இழப்புகளுக்கும் சமூக ஓரங்கட்டல்களுக்கும் மத்தியில் தமது வாழ்வின் துன்பியல் சம்பவங்களைக் கூட, மனித நேயத்துடனும் உயிரோட்டத்துடனும் பகிர்ந்திருக்கும் இப்பன்னிரண்டு சகோதரிகளும் பெண்களது விரிதிறனிற்கு (Resilience) ஓர் எடுத்துக்காட்டு.

ஏனைய பதிவுகள்