சந்திரகௌரி சிவபாலன் (புனைபெயர்: கௌசி). ஜேர்மனி: ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).
xxiv, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16×12 சமீ., ISBN: 978-955-7377-49-0.
சந்திரகௌரியின் இக்கதைத் தொகுதி, அவர் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பிய பல்வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரின் ஐரோப்பிய வாழ்வியல் தொடர்பானஅவரது உள்ளக் குமுறல்களின் வெளிப்பாடாக இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கதைகள் அமைந்துள்ளன. ஐரோப்பிய வாழ்வியல் புலம்பெயர்ந்தோருக்கு வழங்கியுள்ள சுதந்திரம் எந்த அளவுக்கு அந்த மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதைக் கணிசமான கதைகள் காட்டிநிற்கின்றன. அப்பா என்னவானார்?, அவள் நினைத்தாளா இது நடக்குமென்று?, அன்புக்கு வரையறைதான் ஏது?ஆணே உன்கதி இதுதானா?, இப்படியும் ஒருபெண்ணா?, உதிர்ந்த ரோஜா, எது நிஜம்? எனக்காய் ஒரு தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும், ஏணியை நினைத்துப் பாரார், ஒரு குளவியின் அலறல், கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?, கவிதை பாடலாம், காத்திருப்பு, காலம் வரக் கூடிவரும், சீர்கெட்ட வாழ்வு, சுகம் விசாரித்தல், ஞாயிறு மறையும் முன் வந்துவிடு, தலையீட்டைத் தவிர்க்க, தவறுகள் தண்டிக்கப்படலாம்-திருத்தப்படலாம் தண்டனையே வாழ்வானால்?, தாமரை ஏன் தயங்குகிறாள்? தாரம் இழந்த தபுதாரன், திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?, படிதாண்டிய பொழுது, பதறிய காரியம் சிதறிப்போம், பிள்ளைப் பராயத்திலே, புலம்பெயர்வில் ஒரு பாசம் ஏங்குகிறது, பொறுமையின் கனிவு, மதிப்பெண், மதிவதனி ஏன் மதி இழந்தாள்?, மனதின் மாறாட்டம், மாமரத்தில் மாங்கனியே பெறமுடியும், மிருகமாகும் மனிதர்கள், முகத்திரை கிழிக்கப்பட்டது, முடிவைச் சொல்லிவிடு, வழிகாட்டிய வரம், வாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைகின்றன, வாழ்க்கைப் பாடம், வெள்ளை உடைக்குள் கரையும் பருவம், மொழிக்கலப்பு, பழகிப் பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று, சுரங்கள் சிந்துகின்றன, எங்கிருந்தோ வந்தான் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 42 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.