13769 பட்டி.

கே.ஜயதிலக (சிங்கள மூலம்), மாவனல்லை எம்.எம்.மன்சூர் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(23), 24-144 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-6466-0.

இந்நூலில் மாற்றம், மாலா, பட்டி, முள்ளும் மலரும், இரும்பு மனிதன், வேதனை, ஜலதோஷம் அல்லது பெண்கொடிச் சங்கம், நூல்நிலையம், காட்டுரோஜா, செவிட்டு எஜமானன், தேன் மாம்பழம், பயணங்கள் முடிவதுண்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கலாநிதி கே.ஜயதிலக நவீன சிங்கள இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர். 1926ம் ஆண்டு ஜுலை 27இல் தென் மாகாணத்தில் சியனா கோரளையில் ரதாவான என்ற கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர், சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் மிக்கவர். ஊடகவியலாளரான மாவனல்லை எம்.எம்.மன்சூர் இலக்கியத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர். கே.ஜயதிலகவின் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் மிக்கவர்.

ஏனைய பதிவுகள்