13777 உதயக் கதிர்கள் (நாவல்).

திக்குவல்லை கமால். பண்டாரகம: திக்குவல்லை கமால், 104, அடுலுகம, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (கொத்தட்டுவ புதிய நகரம்: P & P Associate,  No.699/1, Elhena Road).

134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-8377-48-1.

ஒரு கிராமியப் பின்னணியில் சமூக யதார்த்தத்திற்கூடாக இந்நாவல் வளர்த்துச் செல்லப்படுகின்றது. ராழியா எனற இளம்பெண் இச்சமுதாய அமைப்பின் ஒரு பிரதிநிதியாவாள். பல்வேறு பிரச்சினைகள், சவால்கள், மேலாதிக்கங்களுக்கு மத்தியில் தனித்து நின்று போராடி ராழியா தலைநிமிர்வதை இந்நாவல் மெய்ப்பிக்கின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய சுதந்திரமும் உரிமையும் கிட்டாதவரையில் அவள் என்றும் அடிமைச் சக்கரத்திற்குள்ளேயே சுற்றிச் சுழலவேண்டியிருக்கும் என்பதை இந்நாவல் வலியுறுத்துகின்றது. பண்பாடுகள், விழுமியங்கள் என்று பெண்ணின் உன்னதங்களைக் காவுகொள்ளும் கொடுமை வென்றெடுக்கபடாத வரையில் அவளுக்கு விடிவேயில்லை. படித்துவரும் இளம் பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு செயற்படுவதன் மூலம் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என்பதை இந்நாவலின் நாயகி ராழியா எதிர்பார்க்கின்றாள். கலாசார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அரச இலக்கியவிழா-2006இன் கீழான ஆக்கப் போட்டியில் தேர்வுசெய்யப்பட்ட நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42017).

ஏனைய பதிவுகள்