13778 எந்தையும் நானே (நாவல்).

ஆணி (இயற்பெயர்: ஆனந்த குமாரசாமி இராமநாதன்). சென்னை 600094: மித்ர பிரசுரம், 20/2, ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (சென்னை 600094: மித்ர பிரசுரம், 20/2, ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).

248 பக்கம், விலை: ரூபா 675., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-23-9.

அரசியல் பின்புலத்தில் வெவ்வேறு சமயங்களைப் பற்றிய தத்துவ விசாரணையின் ஆவணமாக இந்நாவல் அமைகின்றது. ஜெகன் ஒரு குறுகிய வட்டத்திலில்லாமல் விரிந்த தளத்தில் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றவன். இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கனடா என்று பரந்தவொரு பரப்பில் தன் வாழ்க்கை அனுபவங்களை எதிர்கொண்டவன். இந்துவாகப் பிறந்த அவன் இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு பின்னர் கிறிஸ்தவ மதத்தில் காலூன்றி இறுதியில் கலாசாரக் காரணங்களால் பிறந்த மதத்தைவிட்டு அகலவியலாது என்ற வாழ்க்கை அனுபவத்தினால் இந்துவாகவே தன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறான். இதற்குக் காரணமாக ஆஸ்திரேலிய வெள்ளை இனத்துப் பெண்ணான அவளது காதலி ஒலிவியா அமைகிறாள். அவளோ அனைத்து மதங்களினதும் தத்துவச் சாற்றையும் கரைத்துக் குடித்தவள். சமயம் வேறு ஆன்மீகம் வேறு என்று தெளிந்தவள். கிறிஸ்தவப் பெண்ணாகவே வாழ்பவள்.  சமயம் கலாசாரம் சார்ந்தது என்று கருதும் அவள், நான் கிறிஸ்தவப் பெண்ணாகவே இருப்பேன், நீ இந்துவாகவே இரு. எமது குடும்ப வாழ்வில் மதம் தடையேற்படுத்தாது என்று புகட்டுகிறாள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60762).

ஏனைய பதிவுகள்