நீ.பி.அருளானந்தம். நாவலப்பிட்டி: திருமகள் பதிப்பகம், இல. 10, பெனடிக்ற் அவென்யு, பவேகம, 1வது பதிப்பு, ஆனி 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
xii, 277 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1055-15-8.
ஆசிரியரின் ஐந்தாவது நாவல். பெண்ணியம் சார்ந்த கதைக்கருவைக் கொண்டது. பெண் விடுதலை, பெண் சமத்துவம், பெண்ணியம் என்றெல்லாம் பெரும் வார்த்தைகளை உபயோகித்து பெண்ணின் சுதந்திரத்துக்கான போராட்டங்கள் முனைப்புப் பெற்றிருக்கும் இன்றைய காலகட்டத்தில், றெஜினா என்ற இளம்பெண் தனது ஆசா பாசங்களைக் கைவிட்டுத் தனது குடும்பத்தின் சிறப்புக்காக, பெற்றோர் சகோதரர்களின் மகிழ்ச்சிக்காக சாதாரண பனை வடலிகளும் பற்றைக்காடுகளும் நிறைந்த அச்சுவேலிக் கிராமப்புறச் சூழலில் தனது அர்ப்பணிப்பும் தியாகமும் எத்தனை உன்னதமானவை என்பதை இந்நாவலில் இலாவகமாக உணர்த்துகின்றாள். யாழ்ப்பாணத்துச் சமூகத்திலே திருமணம் என்பது பிரச்சினைக்குரிய செயற்பாடாக அமைகின்றது. அந்த அழுத்தங்களை தாங்குகின்ற பெற்றோரின் மனோநிலை இந்நாவலிலே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களின் திருமணத்தில் காணப்படுகின்ற தனித்துவமான மரபுகளை ஆசிரியர் விரிவாக இந்நாவலின் இடையே பதிவுசெய்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60776).