13784 கந்தில் பாவை (2015-1880).

தேவகாந்தன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600005: மணி ஓப்செட்).

264 பக்கம், விலை: இந்திய ரூபா 240., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5244-022-1.

1880-2015 க்கு இடைப்பட்ட மிக நீண்ட காலப்பரப்பில் இக்கதையை விரித்துச் செல்கின்றது ‘கந்தில் பாவை’. மனநலப் பாதிப்பு நோய் பரம்பரை பரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும் யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக இந்நாவல் வெளிப்படுத்துகின்றது. நான்கு கட்டங்களாய் நிகழும் தலைமுறைகளின் தனித்தனிக் கதைகளும் நாவலென்ற ஒற்றைச் சரடில் இணையும்படியாகப் புனைவை ஆசிரியர் திறமையாக மேற்கொண்டுள்ளார். பின்னோட்ட விசையில் தன் கதையை விரித்துச் செல்லும் இந்நாவல், அதையே தன் வடிவ உத்தியாகவும் அமைத்துக் கொள்கின்றது. யாழ்ப்பாணத்தின் புராதன தலைநகராகக் கருதப்படும் கந்தரோடையையும் அதனைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்டு, வரலாறு ஐதீகம் என இரட்டைத் தடங்களில் தன் புனைவுப் பயணத்தைச் செய்திருக்கிறது இந்நாவல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61753).

ஏனைய பதிவுகள்