குணா கவியழகன். சென்னை 600 014: அகல் பதிப்பகம், 348-v, டிடிகே சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (சென்னை: மணி ஆப்செட்).
(8), 336 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ.
தொன்மமும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மக்கள், தமது கூட்டு வாழ்வைக் காத்துக்கொள்ள அரசு என்னும் அலகில்லாததால் அலைக்கழிக்கப்பட்டார்கள் என்பதை அவர்களது வாழ்வுப் போக்கினூடாக இந்த நாவல் விபரிக்க முயல்கின்றது. அது அவர்களின் வேரையும் விழுதையும் தேடுகின்றது. அன்பு, அரவணைப்பு, காதல், காமம் என்ற மெல்லுணர்வுகளையும் பகை, வீரம், துரோகம், ஈகம் என்ற வன் உணர்வுகளையும் விசாரணை செய்வதென்பதே எழுத்தில் பெரும் அனுபவம்தான். அத்தகைய ஒரு களமாகத்தான் கர்ப்பநிலம் வாசகர் முன் வைக்கப்படுகின்றது. கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த மாபெரும் மனிதப் பெயர்வான வலிகாமம் உள்ளக இடப்பெயர்வில் இந்த நாவல் தொடங்குகின்றது. இந்த நூற்றாண்டின் முதல் மனிதப் பேரழிவான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் இந்நாவல் நிறைவுபெறுகின்றது. வஞ்சகத்தில் இழந்துபோன தம் நிலத்தை மீட்க அழுத்தப்பட்டுப் போர் நிகழ்த்திய மக்களின் கதை இது. போரே வஞ்சகம் என ஆன மக்களின் கதையும் இதுவே. இந்த மக்கள் கூட்டங்களின் வேரையும் விழுதையும் தேடித்தரும் பயணமாக ஆகிவிட்டது கர்ப்பநிலத்தின் வனமேகு காதை. (என் சொல்- குணா கவியழகன்).