13787 காடும் கழனியும்: நாவல்.

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: சி.வேல்முருகு). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

150 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-8715-70-3.

சாதி, இனம், குலம், மதம் முதலிய பேதங்களற்ற சமூகத்தினைக் காண்பதையே தவமாகக் கொண்ட வேலழகன் அவர்களின் ஆக்கங்கள் அனைத்திலும் அத்தவத்தின் ஆழமான தடங்களை காணமுடிகின்றது. ஏற்கெனவே 15 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர் இவர்.  மூவின மக்களின் தனித்துவங்களை அடித்தளமாகக் கொண்டு, அதனூடு வேரூன்றியுள்ள மனிதம், மனிதநேயம், மனித உணர்வுகள் ஆகிய உயிர்ப் பண்புகளிலே வளர்ந்து நிற்கும் இந்நாவல் வேலழகனின் தனித்துவத்திற்குச் சான்றாகின்றது. மொனராகல பிரதேசத்திலுள்ள வனபரிபாலன செயலகத்தினைப் பகைப்புலமாகக் கொண்டு அதன் செயற்பாடுகளின் பின்னணியில் குணதாச, சிறியாவதி, தம்பதியினர், அவர்களது பிள்ளைகளான கமலாவதி, மெனிக்கே, வனபரிபாலன அதிகாரிகளான பெரேரா, சேரன், ஹனீபா ஆகியோரைச் சுற்றிக் கதை படர்கின்றது. கிராமிய மக்களின் வாழ்வியலை அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படையில் பொதுவான பிரச்சினைகளையும் மையமாகவைத்து நகர்த்தியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51443).

ஏனைய பதிவுகள்