சி.மௌனகுரு. மட்டக்களப்பு: மகுடம் வெளியீட்டகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
யுத்தத்திற்கு எதிரான மக்களின் குரலாக சார்வாகன் குறுநாவல் அமைகின்றது. யுத்தம் என்ற பெரும்புயல் எப்படி அரசுகளை வாழவைப்பதற்காக மக்களை அழிவுக்குள்ளாக்குகின்றது என்பதையும் அரச இயந்திரம் தனதுஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ள மக்களை எப்படி அடிமைகளாக்கித் தம்வசம் இழுத்துக் கொள்கின்றது என்பதையும், அவர்களுக்கு யுத்த போதையை ஏற்படுத்தி எவ்வாறு பலிகொள்கின்றது என்பதனை சார்வாகம் என்ற சிந்தனை மரபின் பிரதிநிதியாக வரும் சார்வாகன் மூலம் யுத்தத்திற்கு எதிரான தனது வலுவான கண்டனத்தை இங்கு பேராசிரியர் சி.மௌனகுரு பதிவுசெய்கின்றார். அழகிய தமிழ் நடையில் வாசிப்போரின் ஆர்வம் சற்றும் குன்றாத வகையில் கதையின் காட்சிகளை முன்னும் பின்னுமாகப் பொருத்தமாக நகர்த்தி ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கும்போது எழும் உணர்வுகளை தனது குறுநாவலின் வழியாக எழுத்தில் வடித்துள்ளார். மகுடம் வெளியீட்டகத்தின் ஒன்பதாவது வெளியீடு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062752).