செ.கணேசலிங்கன் (மூல ஆசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 3வது பதிப்பு, பங்குனி 2013, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1965, திருத்திய 2வது பதிப்பு, ஆடி 2009. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 260 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-195-8.
1928இல் பிறந்த செ.கணேசலிங்கனின் இலக்கியப் பிரவேசம் 1949இல் தொடங்கிற்று. அவரது முக்கிய படைப்புகளுள் ஒன்றான நீண்ட பயணம் என்ற நாவல் செப்டெம்பர் 1965இல் வெளியானது. பின்னர் நவம்பர் 1994, டிசம்பர் 2002, டிசம்பர் 2007 ஆகிய காலங்களில் மேலும் மூன்று மீளச்சுக்களைக் கண்டது. பிற்காலத்தில் இந்நாவல் பற்றி வெளிவந்த விமர்சனங்கள், கருத்துரைகள் ஆகியவற்றையும் சேர்த்து மீளவும் இந்நாவல் ஆடி 2009இல் இரண்டாவது பதிப்பாகப் பிரசுரமாகியது. இந்நாவல் இலங்கையில் கல்வித்திணைக்களத்தின் உப பாடநூலாகவும் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மூன்றாவது பதிப்பில் மேலதிக கருத்துரைகளுடன் இந்நாவல் சார்ந்து பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளையும் இணைத்து இம் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் 176 பக்கங்கள் நாவலும் 178-260 வரை ஏழு கட்டுரைகளும், கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. செ.கணேசலிங்கனின் நீண்;ட பயணம் ஒரு முன்னுரை (அ.சண்முகதாஸ்), நீண்ட பயணம் நாவலின் பாத்திரப் படைப்பு (மனோன்மணி சண்முகதாஸ்), நீண்ட பயணம் நாவல் புலப்படுத்தும் சமுதாயப் பிரச்சினைகள் (ம.இரகுநாதன்), நீண்ட பயணம் நாவலின் மொழிநடை (செல்வ அம்பிகை நடராஜா), நீண்ட பயணம் நாவலின் புனைகதைத் திறன் (செ.யோகராஜா), நீண்ட பயணம் நாவல் புனைதிறன் (ஆர்.எஸ்.சந்திரசேகர்), செ.கணேசலிங்கனின் வாழ்க்கைப் பின்னணியும் இலக்கியப் பணியும் (லறீனா ஏ.ஹக் ரூ விஜிதா சிவபாலன்) ஆகிய ஏழு கட்டுரைகளும் இந்நாவல் பற்றிய விரிவான திறனாய்வுப் பார்வையையும் நாவலாசிரியர் பற்றிய அறிமுகத்தையும் வழங்குகின்றன. இறுதியாக கடந்தகால பரீட்சை வினாக்களும், நீண்ட பயணம் நாவலில் இருந்து வினவக்கூடிய மாதிரி வினாக்களும் இடம்பெற்றுள்ளன. (மூலப் பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 0689).