ஆ.மு.சி.வேலழகன். திருப்பழுகாமம்: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன்மேடு, 1வது பதிப்பு, ஆனி 2017. (கொக்கட்டிச்சோலை: அட்சயன் அச்சகம், பிரதான வீதி).
xvi, 200 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-00-9.
1972 முதல் இலக்கியத்துறையில் எழுதி வருபவரும், எழுபத்தெட்டு வயதைத் தாண்டும் கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளியுமான கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய நாவல் இது. எமது மக்களின் பண்டைய வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், பேச்சுவழக்குச் சொற்கள், மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவை இந்நாவலில் ஆங்காங்கே எமக்குப் பரிச்சயமாகின்றன. இனப்பிரச்சினை நமது நாட்டைக் கூறுபோடத் தொடங்கிய காலத்திற்கு முன்னர் வாழ்ந்த மக்கள் இக்கதையில் உலாவருகிறார்கள். சிங்களவர்-இஸ்லாமியர் தமிழர் என இனவேறுபாடற்ற ஒரு சமூகமாக வாழ்ந்ததையும், பல தமிழ்க் கிராமங்கள் அந்நாளில் விவிலை வரை பரந்து இருந்தமையையும் அக்கிராமங்களின் அக்கால அழகுறு தமிழ்ப் பெயர்களையும் தொட்டுச் செல்வதினூடாக இந்நாவல் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு எமது சமூக வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கின்றது. கிழக்கிலங்கைக் கிராமங்களில் வாழ்ந்த போடிமார் பற்றிய பாத்திரப்படைப்பு மாநாகன்போடியின் வழியாக இந்நாவலில் உலாவருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64434).