முருகேசு தம்பிப்பிள்ளை. களுவாஞ்சிக்குடி: முருகேசு தம்பிப்பிள்ளை, குருமண்வெளி -12, 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
200 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41533-3-2.
மனிதவாழ்க்கைக் கோலங்களையே தம் கருப்பொருட்களாகக் கொண்டு இரு குறுநாவல்களும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களுடன் எழுதப்பட்டுள்ளன. ஆறு அத்தியாயங்களைக்கொண்ட புதுமைப்பெண் என்னும் குறுநாவல் சந்திரா என்னும் ஏழைப்பெண்ணை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ளது. சந்திரா ஒரு நல்ல தொழிலதிபரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரது உதவியுடன் தன் குடும்பத்தின் பொருளாதார வளத்தினை உயர்த்துகிறாள். தொழிலதிபர் உயிரிழந்ததால் அவர் தனக்கு வழங்கிய சொத்துக்களையே விற்றுப் பங்காளர்களின் கடனைத் தீர்த்து அக்குடும்பத்தை மீள எழவைத்து ஒரு புதுமைப்பெண்ணாகப் போற்றப்படுகிறாள். பதினான்கு அத்தியாயங்களில் விரியும் சுதந்திரப் பறவைகள் என்ற மற்றைய குறுநாவல், தனது விருப்பத்துக்கு மாறாகப் பேசிவைத்திருந்த திருமணத்தைச் செய்யவிரும்பாது தப்பி ஓடும் மைதிலியின் கதை. நவநிதி தனது கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்தும் ஆபத்துக்கள் புத்திசாலித்தனத்தாலும் பொலிசாரின் உதவியாலும் ஆபத்துக்களிலிருந்து தப்பி விடுபடவிடாமல் தடுக்கும் நித்திய கல்யாணியின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை வென்று மலர்வேந்தனை மணம்செய்வது வரை கதை சுவாரஸ்யமாக நகர்த்தப்படுகின்றது.