மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு).
viii, 218 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43209-3-2.
கச்சாயில் இரத்தினம் என்னும் பழம்பெரும் எழுத்தாளரின் புதல்வியான மலரன்னை ஈழத்துப் போர் இலக்கியத்துக்கு ‘போர் உலா’ என்ற நூலைத் தந்த மலரவன் என்ற ஈழவிடுதலைப் போராளியின் அன்னையாவார். மறையாத சூரியனைத் தொடர்ந்து வெளிவரும் இது இவரது இரண்டாவது நாவல். ஒரு குடும்பத் தலைவியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்நாவலில் வறுமையின் பிடியில் நின்று ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதில் பெண்ணின் பங்கு எத்தகையது என்பதையும் அதனை சமாளிக்க அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், துன்பங்கள் என்ன என்பதையும் இந்நாவல் கூறிச் செல்கின்றது. இறுதியில் அப்பெண் எவ்வாறு தன் வறுமை வாழ்விலிருந்து வெற்றிகரமாக அவள் மீண்டெழுகிறாள் என்றும் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கோப்பான தொரு குடும்ப உறவை எவ்வாறு கட்டமைத்துச் சமூகத்தில் மேல்நிலையைப் பெற உந்துகோலாய் அமைகிறாள் என்பதையும் இந்நாவல் கூறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062810).