கனி விமலநாதன் (இயற்பெயர்: சின்னையா றிட்ஜ்வே விமலநாதன்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
iv, 232 பக்கம், விலை: இந்திய ரூபா 110.00, அளவு: 17.5×12 சமீ.
ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட கனி விமலநாதன் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இவர் அங்கு தரப் பரிசோதகராகப் பணியாற்றுகின்றார். 1990இலிருந்து விஞ்ஞானக் கட்டுரைகளையும் அறிவியல் தொடர்களையும் எழுதியவர் இவர். கனடாவில் வெளிவரும் வர்த்தக பத்திரிகையான ‘விளம்பரம்’ இதழில் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் ‘பிடித்தவர்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த தொடர் நாவல் இங்கு ‘விந்தை மனிதர்கள்’ என்ற தலைப்பில் நூலுருவாகியுள்ளது. பரபரப்பு, மர்மம், அறிவியல் கருதுகோள்கள் என்பவற்றுடன் சுவையான மனித நடவடிக்கைகளின் பதிவுகளையும் கொண்டதாக இந்த நாவல் அமைந்துள்ளது. புத்தம் புதிய வீடு, இரத்தக்காட்டேறி, உயிரின் விலை, சடங்குகள், பரம்பரை சொத்து ஆகிய ஐந்து பாகங்களில் இந்நாவல் விரிந்துள்ளது.