உப்புல் சாந்த சன்னஸ்கல (சிங்கள மூலம்), சாமிநாதன் விமல் (தமிழாக்கம்). நுகெகொட: Sanghinda Printers and Publishers, இல.6, விஜயராம வீதி, கங்கொடவில, 1வது பதிப்பு, 2015. (நுகெகொட: Sanghinda Printers and Publishers).
404 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-681-262-6.
சிங்கள கிராமியச் சமூகமொன்றின் பொருளாதார, சமூக விடயங்களை மொழிகடந்த அறிதலுடன் புரிந்துகொள்ள இந்நாவல் வழிதிறந்துவிடுகின்றது. அவர்களிடையே காணப்படும் வர்க்கப் பிளவுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் காரமான விமர்சனத்துக்குள்ளாக்கும் நாவல் இது. பொருளாதார வறுமையின் தாக்கம் சிந்தனைச் செழிப்புமிக்க ஒரு மனிதனை எவ்வாறாக அங்கீகாரப் பிறழ்வுக்கு இட்டுச் செல்கின்றது என்பதை இந்நாவல் விபரிக்கின்றது. ஒரு தாயின் உன்னதமான தியாகங்கள் கண்களில் நிழலாடும் வண்ணம் இந்நாவல் பக்கம்தோறும் மணம்பரப்புகின்றது. நொறுக்கப்பட்ட கனவுகளைப் பற்றிப் பேசும் ஆசிரியர், வெளிப்படையாகத் தன் உணர்வுகளையும் கோபத்தையும் கொட்டிச் செல்கிறார். பொருளாதார நலிவுற்றதொரு சமூகம் உயர் அந்தஸ்துள்ள பணம்படைத்தவர்களினால் ஏளனத்துக்குள்ளாக்கப்படும் சந்தர்ப்பங்களை யதார்த்தமாகக் காட்டுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62742).