விமலா ஆரியரத்ன (சிங்கள மூலம்), மலரன்பன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(14), 15-96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ.,ISBN: 978-955-30-7248-1.
1815இல் கண்டி அரசை ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியையும், அதன் விளைவாக அவர்களிடையே தோன்றிய போராட்ட உணர்வுகளையும், போராட்டமுயற்சிகளையும் போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளையும் இந்நாவல் உணர்த்துகின்றது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘மவுசாகொல்ல விதானையார்’ என்ற ஒரு விதானையார் குடும்பத்தை மையமாகக்கொண்டு நாவலின் கதை பின்னப்பட்டுள்ளது. இந்நாவல் தரங்கனி பெரேராவினால் The Great Battle என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த மலரன்பனுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான கொடகே சாகித்திய விருது 2017இல் வழங்கப்பட்டது. தன்னுடைய முகவரியினாலும், தன்னுடைய படைப்பின் பாத்திரங்களினாலும், பாத்திரங்களின் பேசுமொழியாலும் ஜீவன் மிக்கதும், மலையகத்துக்கே உரியதும் தனித்துவமானதுமான படைப்புக்களைத் தருகின்றவர் மலரன்பன். மாத்தளை மண் தந்திருக்கும் இப் படைப்பாளி, மலையகத்தின் வடக்கு வாசலான மாத்தளையில், நோர்த் மாத்தளைத் தோட்டத்தில் பிறந்தவர். ஆறுமுகம் என்பது பெற்றோர் இட்ட பெயர். மாத்தளை கிறிஸ்துவ தேவாலயக் கல்லூரியில் கல்வி கற்று, ஆசிரியராகப் பணியாற்றிப் பிறகு தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகித்தவர்.