13813 இலக்கியம்: விசேட மலர் 2017: கோட்பாட்டு நோக்கில் இலங்கைப் புனைகதை இலக்கியம்.

ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியரும்), கொழும்பு: அரச இலக்கிய ஆலோசனைக் குழு, கலாசாரஅலுவல்கள் திணைக்களம்,  உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்ரமுல்ல, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 217 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0353-88-0.

இந்நூலில் ‘கோட்பாட்டு நோக்கில் இலங்கைப் புனைகதை இலக்கியம்” என்ற கருத்துருவின் அடிப்படையில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழ் இலக்கியங்களின் புதிய எழுகோலங்கள் (சபா.ஜெயராசா), இயற்பண்புவாத நோக்கில் இலங்கைப் புனைகதைப் படைப்புக்கள் (ந.இரவீந்திரன்), யதார்த்தவாதமும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), சமுதாய விமர்சன நோக்கிலான ஈழத்து நாவல்கள் (நா.சுப்பிரமணியன்), சமூக வரலாற்றுப் பின்புலத்தில் இலங்கைத் தமிழ்ச் சிறுகதைகள் (வ.மகேஸ்வரன்), உளவியல் ஆய்வு நோக்கில் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் (ஸ்ரீ பிரசாந்தன்), கூற்றுக் கோட்பாட்டு நோக்கில் ஈழத்து நாவல்கள் (ஜெ.ஹறோசனா), தலித்தியக் கோட்பாட்டு நோக்கில் ஈழத்துச் சிறுகதைகள் (செ.யோகராசா), இனவரைவியலும் ஈழத்து நாவல்களும் (எம்.எம்.ஜெயசீலன்), தொன்மவியல் நோக்கில் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் (பாஸ்கரன் சுமன்), பின்நவீனத்துவப் பாணியிலான ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), மீப்புனைவியல் நோக்கில் ஈழத்துச் சிறுகதைகள் (சி.ரமேஷ்),  குறியியல் நோக்கில் ஈழத்துச் சிறுகதைகள் (க.இரகுபரன்), விளிம்புநிலை மக்களின் குரலாக ஈழத்து நாவல்கள் (றூபி வலன்ரீனா பிரான்ஸீஸ்), மார்க்சியமும் பண்பாட்டுப் புரட்சியும் இலங்கைப் புனைகதைகளை முன்வைத்து (லெனின் மதிவானம்), இலங்கைச் சிறுகதைகளில் பின்காலனிய கூறுகள் (சு.முரளிதரன்) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் ஆசிரியர் குழுவில் சு.முரளிதரன், எஸ்.சிவநேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62993).

ஏனைய பதிவுகள்

‘gonzo mother mom xxx’ Search

Articles Incredible Blond Requires Afternoon Anal on the Kitchen table Yet not, if you’d like to have fun with higher stakes, it is recommended that