13816 எல்லை நீத்த.

ஸ்ரீ பிரசாந்தன். சென்னை 600017: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், 1வது பதிப்பு, மே 2014. (சென்னை 600005: கணபதி புரோஸஸ்).

xvi, 112 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 18×12 சமீ.

கவியரசர் கம்பனுடன் இந்நூலாசிரியர் கொண்ட தீவிர பிணைப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ள இரசனைக் கட்டுரைகள் ஒன்பதினதும், பதிலாக அமைந்ததொரு கட்டுரையினதும் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அன்பின் முழுமை, ஆண்மை, அங்கதன், வென்றதம்மா, அறை பறை, மல்கிய கேநயன் மடந்தை, எல்லை நீத்த, தீராக் காதலர், சொல் மாண்புடைய அன்னை, நன்றியுடைமை, கம்பனின் பொற்குவியல் ஆகிய தலைப்புகளில் இவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62866).

ஏனைய பதிவுகள்