அ.பொ.செல்லையா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
316 பக்கம், விலை: இந்திய ரூபா 65.00, அளவு: 17.5×12 சமீ.
கனேடிய தமிழ் வானொலி மூலமாக ஆசிரியரால் வழங்கப்பட்ட வானொலி உரைகளின் நூலுரு. மூன்று பிரிவுகளில் மொத்தம் 45 கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொகுதி மலர்ந்துள்ளது. உயர்தர மாணவர்களின் இலக்கியப் பாடநெறியின் துணைநூலாகப் பயன்படுத்தத்தக்கது. குறள்நெறி போற்றி, அதன்வழி வாழ சமகால உதாரணங்களுடன் நன்நெறி புகட்டும் கட்டுரைகள் இவை. விஞ்ஞானப்பட்டதாரியான அ.பொ.செல்லையா வடக்கின் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை மகா வித்தியாலயத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.