வண.பிதா ஞா.பிலேந்திரன், கி.விசாகரூபன், தி.வேல்நம்பி (பதிப்பாசிரியர் குழு). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாண மறை மாவட்டம், 1வது பதிப்பு, ஆடி 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xii, 249 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-51423-4-2.
27,28 ஆடித்திங்கள் 2013 அன்று யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்டம் இணைந்து நடத்திய தவத்திரு தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா நிகழ்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மட்டக்களப்புத் தமிழ் நாட்டார் கதைகளில் அறம்-ஓர் அமைப்பியல் ஆய்வு (கோபாலப்பிள்ளை குகன்), சமகாலக் கவிதைகளில் அகவயம்: ஒரு மனமுதல்வாத வாசிப்பு (ந.மயூரரூபன்), தமிழியல் ஆய்வு வரலாற்றில் ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை (மா.ரூபவதனன்), அறிவியல் தமிழ் வளர்ச்சி: கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அணுகுமுறைகள் (மா.சின்னத்தம்பி), தமிழ்மொழி தமிழிலக்கிய வளர்ச்சியில் 19ஆம் நூற்றாண்டுக் கிறீஸ்தவப் பத்திரிகைகள் (சி.பத்மராஜா), தமிழ்-செம்மொழி நியமங்களும் அதனைத் தக்கவைத்தலின் நடைமுறைகளும், சவால்களும் (நவதீசன் உதயலதா), மணிமேகலை குறிப்பிடும் பௌத்த தத்துவம் (இ.சகாயசீலன்), பின்னைப் போர்ச் சிறுகதைகள்: கருணைரவியின் ’கடவுளின் மரணம்’ தொகுதியை முன்வைத்து ஓர் ஆய்வு (வதனரேகா அஜந்தகுமார்), அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நாவல் -ஓர் ஆய்வு (சு.குணேஸ்வரன்), யாழ்ப்பாண இந்து சமய செல்நெறியில் இளைஞர்களின் பங்கும் பணியும் (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), இடைநிலைப் பிரிவு வகுப்புகளில் தமிழ் இலக்கணம் கற்றல், கற்பித்தலில் எதிர்நோக்கும் சவால்கள் (பா.சோபா), திரைப்படங்கள் சித்திரிக்கும் குறவர் வாழ்வியல்: அளிக்கம்பை வனக்குறவர் சமூகத்தை மையமாகக் கொண்டது (ச.தயாகாந்தன்), தொன்மை மிக்க தமிழர் பண்பாட்டைப் பேணும் மட்டக்களப்பு (கௌரி புண்ணியமூர்த்தி), ஈழம் கண்ட தனிப்பெரும் தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார் (சி.ரமேஷ்), இலங்கைப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள்: ‘பாலை நண்டுகள்’ தொகுதியை முன்வைத்த ஓர் ஆய்வு (த.அஜந்தகுமார்), இந்துக்களது வழ்வியலில் அறம் (விக்கினேஸ்வரி பவநேசன்), மலையகத் தமிழ் நாவல்களின் அண்மைக்காலப் போக்குகள் (எஸ்.வை.ஸ்ரீதர்), மட்டக்களப்பு மேற்கு வலய மக்களின் வாழ்வியலுடன் இணைந்த பண்பாட்டு அம்சங்கள்: ஏறாவூர் பற்று பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (பொன்னுத்துரை நிலாந்தினி), சதகங்கள் புலப்படுத்தும் அறச்சிந்தனைகள் (ஜனகா சிவசுப்பிரமணியம்), தமிழிலக்கியத்தில் சமயம் கடந்த ஆன்மீகம் (ஜெயசேகரம்), ஆரம்பப் பிரிவு மாணவர்களின் தமிழ்மொழி வாசிப்புத்திறனும் சவால்களும் (க.கேதீஸ்வரன்), தமிழ்க் குறுங்காவியங்கள் வரிசையில் ‘தகனம்’-ஓர் ஆய்வு நோக்கு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), அர்ச். யாகப்பர் அம்மானை-ஈழத்தில் போர்த்துக்கேயர் கால கிறிஸ்தவ இலக்கியப் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு (ஹறோசனா யேசுதாசன்), தமிழர் பண்பாட்டின் தொன்மையில் சம்ஸ்கிருத மொழியின் செல்வாக்கு-மொழிபெயர்ப்பியலூடான பார்வை (ச.பத்மநாதன்), Tamil among the languages of E-Governance in India (தர்மினி நரேந்திரநாதன்), Nattiyak Kalai: Fr. Thaninayagam’s Perspective (வண.என்.மரிய சேவியர்) ஆகிய 26 ஆய்வுக்கட்டுரைகள் இச்சிறப்பிதழில் தொகுக்கப்பட்டுள்ளன.