தேவகி ரமேஸ்வரன். வல்வெட்டித்துறை: திருமதி தேவகி ரமேஸ்வரன், தெணியகம், பொலிகண்டி, இணை வெளியீடு, கனடா: நான்காவது பரிமாணம், 1565 ஜேன் வீதி, தபால்பெட்டி இல. 34515, ரொரன்ரோ, ஒன்ராரியோ, ஆ9N 1சுழு, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (நெல்லியடி: சதாபொன்ஸ், மாலு சந்தி, அல்வாய்).
(4), 66 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.
எழுத்தாளர் கந்தையா நடேசன் (தெணியான்) அவர்களின் ஐந்து நாவல்களை அவரது சகோதரியின் மகளான (மருமகளான) தேவகி இராமேஸ்வரன் இவ்வாய்வில் ஆராய்ந்துள்ளார். உள்வீட்டுப்பிள்ளையின் பார்வையில் மிகத்தெளிவாக தெணியானின் ஆளுமைகளை இங்கு பார்க்கமுடிந்திருப்பது ஆய்வின் சிறப்பாகும். தெணியானின் ஆளுமை உருவாக்கம், தெணியானின் நாவல்கள் (கதைக்கரு, காலமும் களமும்), சமுதாயப் பிரச்சினைகள், தெணியானின் நாவல்கள் ஓர் ஒப்பீடு, தெணியானின் நாவல்கள் ஒரு மதிப்பீடு ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. தேவகியின் அன்னையாகிய அமரர் திருமதி பாக்கியவதி சரவணமுத்து அவர்களின் நினைவாக இந்நூல் 29.11.2009 அன்று வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 150 சிறுகதைகள், 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்புலக அறுவடைகளிற் சிலவாகும். ‘விடிவை நோக்கி’ வீரகேசரி வெளியீடு, கொழும்பு (1973), ‘கழுகுகள்’ நர்மதா வெளியீடு, சென்னை (1981), ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ முரசொலி வெளியீடு, யாழ்ப்பாணம் (1989), ‘மரக்கொக்கு’ நான்காவது பரிமாணம் வெளியீடு, கனடா (1994), ‘காத்திருப்பு’ பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு (1999), ‘கானலின் மான்’ பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு (2002), ‘தவறிப்போனவன் கதை’ கொடகே சகோதரர்கள் வெளியீடு, கொழும்பு (2010), ‘குடிமைகள்’ ஜீவநதி வெளியீடு, அல்வாய் (2013) என்பன அவரது முக்கிய நாவல்கள். ‘சிதைவுகள்’ மீரா பதிப்பக வெளியீடு, கொழும்பு (2003), ‘பனையின் நிழல்’ மயூரன் நினைவு வெளியீடு, அல்வாய் (2006) ஆகியன அவர் எழுதிய குறுநாவல்களில் சிலவாகும்.