செல்வா கனகநாயகம். லண்டன்: தமிழியல் வெளியீடு, 27B High Street, Plaistow, London EI3 0AD, இணை வெளியீடு, நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜூலை 2010. (சென்னை 600 005: மணி ஆஃப்செட்).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-89359-98-0.
கனடா ரொறொன்றோ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரான செல்வா கனகநாயகம் கனடாவிலிருந்து வெளிவரும் ‘காலம்” தமிழ்ச் சஞ்சிகைக்காக அவ்வப்போது தமிழில் எழுதிய எட்டுக் கட்டுரைகளும், ஆங்கிலத்தில் எழுதிய இரு கட்டுரைகளின் தமிழாக்கங்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. இவற்றுள் மூன்று நெடுநல்வாடை, மதங்கசூளாமணி, பல்லவர் காலத்து மதமும் இலக்கியமும் பற்றியனவாகும். மற்றொன்று ஏ.ஜே.கனகரத்தினா பற்றியது. எஞ்சியவை காலனித்துவ, பின் காலனித்துவப் பின்னணியில் எழுதப்பட்ட இலக்கிய விமர்சனங்கள், நெடுநல்வாடை: மொழிபெயர்ப்பும் அழகியலும், சிவத்தம்பியின் ஆய்வு நோக்கில் மதமும் இலக்கியமும், மதங்கசூளாமணி: நூலும் பின்னணியும், சடங்கு: சில குறிப்புகள், இலக்கியத் திறனாய்வும் இலக்கிய வரலாறும், பின்காலனித்துவ இலக்கியப் போக்குகள், இலங்கையில் அரசியலும் இலக்கியமும், எனது கற்பனையில் இலங்கை, நவீன ஈழமும் அச்சிபியின் கலையும் கட்டமைப்பும், ஒரு திறனாய்வாளனின் உருவச்சித்திரம் ஆகிய பத்துத் தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.