13826 முற்போக்கு இலக்கியம்: கலைச்செல்வி இதழ்வழிக் கருத்தரங்கக்கட்டுரைகள்.

தி.செல்வமனோகரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vii, 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42192-4-3.

கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகையாகும். 1958 இல் முதன்முதலாக கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக (சிற்பி) சி. சரவணபவன் பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இச்சிற்றிதழ் ஏற்படுத்திய இதழ்வழிக் கருத்தரங்கில் 1962 நவம்பரில் கா.சிவத்தம்பி (பின்னாளில் பேராசிரியரானவர்) எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக 1962 டிசம்பர்-1963 ஜனவரி இதழ்களில் மு.தளையசிங்கமும், 1963 மார்ச் இதழில் நவாலியூர் சோ.நடராசனும் முற்போக்கு இலக்கியம் பற்றிய விவாதத்தைத் தொடர்ந்தனர். சமகாலத்தில் எஸ்.பொ. அவர்களும் முற்போக்கு இலக்கியம் பற்றிய தனது பதிவுகளையும் ஆங்காங்கே மேற்கொண்டார். இவ்வாறு ஈழத்தில் நடைபெற்ற கருத்தியல்சார் உரையாடலை இந்நூல் ஆவணப்படுத்தியுள்ளது. இதில் முற்போக்கு இலக்கிய விவாதங்கள்: மீள்வாசிப்பு (தெ.மதுசூதனன்), முற்போக்கு இலக்கியம் (கா.சிவத்தம்பி), முற்போக்கு இலக்கியம்-எதிர்வினை 1 (மு.தளையசிங்கம்), முற்போக்கு இலக்கியம் -எதிர்வினை 2 (நவாலியூர் சோ.நடராசன்), முற்போக்கா? பிற்போக்கா? (எஸ்.பொன்னுத்துரை) ஆகிய ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Technetium Touristik & Caravaning

Content Eltern Man sagt, sie seien Das Schlüssel: dolphins pearl deluxe-Spiel für PC Was Katzenhalter Inside Der Wasserschale Anmerken Sollten Nps Fragebeispiel Die eine Nachforschung