கற்பிட்டி எம்.ஏ.எம்.செல்லமரிக்கார். கற்பிட்டி: எம்.ஏ.எம்.செல்லமரிக்கார், ஆஷியானா, இல. 41, மோல்ஸ் வீதி, புத்தளம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
(12), 108 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20.5×13.5 சமீ.
அருட்கொடையாக வந்த அண்ணல் (ஸல்) அவர்களின் அன்பு மகள் அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் வரலாற்றினை கவிதையுருவில் இந்நூல் வழங்குகின்றது. இறைத்தூதாய் பெருமானார் (ஸல்), தந்தை துயர் தாளா பாத்திமா (ரலி), அன்னையை இழந்தார், மதீனா நோக்கி மகிபர் சென்றார், அலி(ரலி), சிறு வயதில் பாத்திமா (ரலி), மணப் பருவம், மணவுடை ஈந்த பாத்திமா (ரலி), புது மனையில் பாத்திமா, ஏழ்மையில் இன்பம், அண்ணல் (ஸல்) அருகே அன்னை பாத்திமா, அன்னை பெற்ற செல்வங்கள், தனக்கென வாழாத் திருமகள், நோயும் நோன்பும், போர்க்களம் சென்ற பாத்திமா(ரலி), அன்னையின் வாட்டமும் அண்ணலார் (ஸல்) பதிலும், வணக்கத்தில் அன்னை பாத்திமா(ரலி), இறுதி ஹஜ், அண்ணல்(ஸல்) அவர்களின் இறுதி, அன்னை பாத்திமா(ரலி)வின் ஏக்கம், மாதரசி பாத்திமா(ரலி) மறைவு, அன்னையின் பிரிவால் அலி(ரலி)யும் மக்களும், ஹலரத் பிலால்(ரலி) அடைந்த வேதனை, பாத்திமா(ரலி)வின் பொன் மொழிகள், நல்மாராயம் பெற்ற நான்மணிகள், அன்னை ஆசியா, அன்னை மரியம் (அலை), இமாம் ஹஸன்(ரலி), இமாம் ஹ{ஸைன்(ரலி), மாவீரர் அலி, பிரார்த்தனை இறைவா, பாத்திமா(ரலி)புகழ் கீதங்கள் ஆகிய தலைப்புகளில் இக்கவிதையாக்கம் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23815).