மலர்க்குழு. கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்;).
214 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
இம்மலரில் சிறப்பு ஆக்கங்களாக கவிதைகள், சிங்கள-ஆங்கில-தமிழ் மொழிகளிலான கட்டுரைகள் என்பன இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழிக் கட்டுரைகளாக, மாத்தளையும் முஸ்லீம்களும் (ஸய்யத் முகம்மத் பாரூக்), உலகம் எங்கணும் ஓயாது ஒலிக்கும் ஒரு திருநாமம் (எஸ்.டி.சிவநாயகம்), ஸெய்யது ஸெயின் மௌலானாவின் சன்மார்க்கப் பணி (ரு.டு.ஆ. ராசீக்), மஸ்ஜித்-மத்ரஸா தினம்-தோற்றம்: வசதி குறைந்த இறை இல்லங்களுக்கு வாரி வழங்குவோம் வாரீர், விஞ்ஞானக் கல்வியும் எமது சமூகமும் (பாத்திமா சாஹினா அனீஸ்), இலங்கையின் வாணிபத்துறை வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு, வசந்தங்கள் மீண்டும் (எம்.டீ.எம். சம்சீர்), நபிகளாரும் சமாதான உடன்படிக்கைகளும் (பாத்திமா நிலூபா முக்தார்), தங்கத்துக்குள் வைரம் (எம்.என்.ஆயிஷா நுஸைஹா), அவர்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள் – சிறுகதை (கே.கன்சுல் வஸீரா), இஸ்லாமும் விஞ்ஞானமும் (எம்.எஸ்.எம்.பிஸ்மி), அருகிவரும் முஸ்லிம்களின் பாரம்பரியக் கலை வடிவங்கள் (கலைவாதி கலீல்), இறைவனின் அழைப்பினிலோர் இலக்கியவாதி (அபூரவ்ஷன்) என்பன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14122).