வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை, ஸ்ரீ வ.குமாரசுவாமிப் புலவர் (புத்துரை). யாழ்ப்பாணம்: க.வேற்பிள்ளை, வண்ணார் பண்ணை, 1வது பதிப்பு, ஆனி 1898. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை).
(8), 409 பக்கம், விலை: ரூபா 9.00, அளவு: 23.5×15.5 சமீ.
வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரத மூலத்துக்கு காரைக்குடியைச் சார்ந்த முத்துப்பட்டணம் ரா.ம.கு.ராம.சொக்கலிங்க செட்டியாரும், அரிமளம் அ.செ.ப.அண்ணாமலைச் செட்டியாரும் வேண்டிக்கொண்டபடி, யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் மருகரும் மாணாக்கருமாகிய ந.ச.பொன்னம்பலபிள்ளை அவர்கள் காண்டவ தகனச் சருக்கம் 26ஆவது செய்யுள் வரை புத்துரை எழுதியிருந்தார். பின்னர் 27ஆவது செய்யுள் முதல் புலோலியூர் ஸ்ரீ.வ.குமாரசுவாமிப் புலவரவர்களால் எழுதப்பட்ட புத்துரையும் இணைக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. காப்பு, சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் ஆகியவற்றை அடுத்து ஆதிப்பருவத்தின் குருகுலச் சருக்கம், சம்பவச் சருக்கம், வாரணாவதச் சருக்கம், வேத்திரகீயச் சருக்கம், திரௌபதி மாலையிட்ட சருக்கம், இந்திரப்பிரத்தச் சருக்கம், அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம், காண்டவதகனச் சருக்கம் ஆகிய எட்டுச் சருக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14634).