கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
iv, 112 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 18×12 சமீ.
ஆளுமைமிக்க படைப்பாளிகள் பற்றியதான தன் எண்ணங்களையும் தன்னைக் கவர்ந்த இலக்கிய ஆக்கங்கள் குறித்த மதிப்பீடுகளையும் இலகுவான மொழிநடையில் கூறுகின்றார். பொது, முன்னுரைகள், ஆளுமைகள், மதிப்புரைகள்ஆகிய நான்கு பிரிவுகளில் இவரது 26 ஆக்கங்கள் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. பொதுப்பிரிவின் கீழ் ஈழத்தில் தமிழ் இலக்கியத் திறனாய்வுப் போக்குகள், ‘விடிவு’ என்ற வீடியோ, ஆதிக்க மனப்பான்மை, இலங்கை வானொலியில் இருட்டடிப்பு, சென்னையில் நாட்டிய நாடகம், வ.அ.இராசரத்தினம் பவளவிழா, கவிதை எனின் எலியட் கூறுவது என்ன? ஆகிய கட்டுரைகளும், முன்னுரைகள் என்ற பிரிவில், சடகோபனின் வசந்தங்களும் வசீகரங்களும், மொழிவாணனின் இரவு நேர பூபாளம், மாதுமையின் தூரத்துக் கோடை இடிகள், புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் விடியட்டும் பார்ப்போம், சாந்தனின் உள்ளங்கையில் உலக இலக்கியம், க.சண்முகலிங்கத்தின் அபிவிருத்தியின் சமூகவியல் ஆகிய படைப்பாக்கங்கள் பற்றிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆளுமைகள் என்ற பிரிவில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், நா.சோமகாந்தன், இர.சிவலிங்கம், பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக் ஜீவா, சானா சண்முகநாதன் ஆகிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளையும் காண முடிகின்றது. மதிப்புரைகள் என்ற பிரிவில் ‘செங்கை ஆழியானின் கிடுகுவேலி’, ‘சில நூல்கள் சிறு குறிப்புகள்’, ‘சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’, ‘வாகரைவாணனின் மட்டக்களப்புக் காவியம்’, ‘யாழ்.பல்கலைக்கழகத்தின் தடம் 2000’, ‘கசினின் குமாரி இரஞ்சிதம்’, ‘தேடிப்படிக்கச் சில நூல்கள்’ ஆகிய கட்டுரைகளை ஆசிரியர் இடம்பெறச்செய்துள்ளார்.