கே.எஸ்.சிவகுமாரன் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை: கெயார்புல் டெக்).
76 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 18×12 சமீ.
இலங்கை தினக்குரல் நாளிதழில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளும், ஈழத்துச் சஞ்சிகைகளில் பிரசுரமான அவரது திறனாய்வுக் கட்டுரைகளில் சிலவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழக வாசகர்களுக்கு இலங்கை எழுத்துப்பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் உதவும். அமெரிக்க மண்ணில் இரு வருடங்கள் (2002-2004) என்ற தொடரில் ஐந்து சிறு கட்டுரைகள் முதலாவதாக இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ஈழத்தின் சில நூல்களையும் சஞ்சிகைகளையும் திறனாய்வு செய்வதாய் அமையும் பின்வரும் தலைப்பிலான கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. (1) வர்ணங்கள் கரைந்த வெளி-கவிதை நூல், (2) விடியலுக்கு முன்-சிறுகதைகள் பகுப்பாய்வு, (3) என் நினைவுகளும் நிஜங்களும்-நாடக வரலாறு, (4) பூரணி, ஞானம் – இரு இலக்கிய ஏடுகள், (5) சில வெளியீடுகள்-சில குறிப்புகள், (6) யாழ்ப்பாணம், திருக்கோணமலை- இலக்கியச் சந்திப்புகள், (7) சமயம் இசை நூல்கள், சஞ்சிகை – மனப்பதிவுகள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64628).