கா.சிவத்தம்பி. சென்னை 600021: பாட்டாளிகள் வெளியீடு, 42, நாராயணப்ப நாயக்கன் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1978. (சென்னை 600 014: மூவேந்தர் அச்சகம்).
47 பக்கம், விலை: இந்திய ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ.
தமிழ்ப் பாரம்பரியத்தினை மார்க்சீயக் கண்ணோட்டத்தில் விளங்கும் அல்லது விளக்கும் முறைமை முதன் முதலில் இலக்கியத் துறையில்தான் ஏற்பட்டது. ஆக்க இலக்கிய எழுத்தாளர்கள் பலரின் மார்க்சீய நிலைபாடும், அவர்களுக்கு உதவியாளர்களாகவும், சில வேளைகளில் அவர்கள் மேற்கொண்டு செல்ல வேண்டிய இலக்கியப்பாதைகளின் தன்மையை எடுத்துக் காட்டுபவர்களாகவும் விளங்கிய, விளங்கும் விமரிசகர்களது மார்க்சீய நிலைபாடும், தமிழ் இலக்கியத்தை மார்க்சீய நோக்கில் பார்க்கும் பண்பினைத் தோற்றுவித்து அதற்கு வலிவூட்டிற்று. முதலிற் சமகால, நவீன இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்குப் பயன்பட்ட மார்க்சீயம் இப்பொழுது தமிழின் பண்டைய இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. அவ்வகையில் தமிழ் இலக்கியத்தை மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொள்ள உதவும் நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19357).