13841 ஈழத்துத் தமிழ் நாவல்: சில பார்வைகள்.

ம.இரகுநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி ம.இரகுநாதன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிறின்டேர்ஸ், 72, பலாலி வீதி).

iv, 98 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

இந்நூலில், ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்களில் மதப்பிரசாரம்-சில குறிப்புகள், புனை கதைகளில் கேட்கும் புதிய குரல்கள், செ.கணேசலிங்கனின் நாவல்களில் பெண்ணியச் சிந்தனையின் தாக்கம், செ.கணேசலிங்கனின் நாவல்களில் குடும்பச் சிதைவு, செங்கை ஆழியானின் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள், சமுதாய வாழ்வை நெறிப்படுத்தும் உயிரினங்கள்- செங்கை ஆழியானின் நாவல்களினூடான ஒரு தேடல், புலம்பெயர் கதைகளில் கலப்பு மணங்கள், டானியலின் நாவல்களில் சம்பவப் புனைவு, மலையகத் தமிழ் நாவல்கள் புலப்படுத்தும் வாழ்வியல் பிரச்சினைகள் ஆகிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  10373CC).

ஏனைய பதிவுகள்