இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
viii, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-11-5.
பெருவாரிப் பிரதியாளி செங்கை ஆழியானின் ‘ருத்திர தாண்டவம்’, இன்னொரு அதிர்வின் கோணம், ஒத்த கருத்துச் சொல், வடமராட்சி வட்டார மொழியில் தமிழ் சினிமாவின் தாக்கம், சுரோடிங்கரின் பூனை (Schrodinger’s Cat), கமல்ஹாசன் கவிதைகள்: சில குறிப்புகள், காலந்தின்ற கனவொன்றின் மங்கிய புகைப்படம் கஸ்தூரியின் ஆக்கங்கள், தூலவித்துள் சூக்குமக்காடு சொற்களால் அமையும் உலகு, எந்திரசாலிகளை (Robots) காதலித்த ஐசாக் அசிமோவ், தமிழ்ச் சிறுகதைகளில் கடவுளின் வருகை, மரபின் வசீகரமாய் த.ஜெயசீலனின் புயல் மழைக்குப் பின்னான பொழுது, அலைந்து திரிந்த ஆளுமை- பிரமிள், அலாதியான கதைசொல்லி: அன்ரன் செக்கோவ், வதிரி இ.இராஜேஸ்கண்ணன் சிறுகதைகளில் முதுமை-சில குறிப்புகள், புனைகதைகளில் வெட்டியான் ஆகிய பதினைந்து கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இ.சு.முரளிதரன் இந்நூலில் தான் வாசித்தனுபவித்த ஆக்கங்களின் உள்ளிடை இருப்பையும் இன்மையையும் துல்லியமாய் அடையாளம் காண்கிறார். கட்டுரை வகைமைகளிலேயே கடினமான, ரசனையோடும் சுருக்கமாகவும் சொல்லும் முறையில் அழகாய் எழுதிச்செல்கிறார்.