தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
viii, 124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-8354-54-4.
ஞானம் சஞ்சிகை ஆசிரியரால் நூல்களுக்காக எழுதப்பட்ட பல்வேறு முன்னுரைகளில் தேர்ந்த 22 முன்னுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பிலுள்ள முன்னுரைகளில் பலவும் பல்துறை நோக்குள்ளவையாக அமைந்துள்ளன. ஒரு வித்தியாசமான விளம்பரம் (சிறுகதைத் தொகுப்பு)/ரூபராணி ஜோசப், மற்றுமொரு மாலை (கவிதைத் தொகுப்பு)/செ.சுதர்சன், மீண்டும் வசந்தம் (நாவல்)/திருமலை வீ.என்.சந்திரகாந்தி, ஒரு மரணமும் சில மனிதர்களும் (சிறுகதைத் தொகுப்பு)/தாட்சாயணி, தொலையும் பொக்கிஷங்கள் (சிறுகதைத் தொகுப்பு)/வதிரி இ.இராஜேஸ்கண்ணன், சங்கானைச் சண்டியன் (குறுநாவல்கள், சிறுகதைகள்)/வி.ஜீவகுமாரன், குற்றமும் தண்டனையும் (சிறுகதைத் தொகுதி)/எம்.பி.எம்.நிஸ்வான், கண்ணின் மணி நீயெனக்கு (நாவல்)/அகிலேஸ்வரன், சமூகஜோதியின் சங்கநாதம் (சொற்பொழிவுகள்)/எம்.ஏ.றாபீக், சந்தன மரம் (மொழிபெயர்ப்பு)/அ.மு.பாறூக், எனது பேனாவின் நிதர்சனம்(கவிதைத் தொகுப்பு)/சமரபாகு சீனா உதயகுமார், தீரதம் (சிறுகதைத் தொகுப்பு)/ஆர்.எம்.நௌசாத், உணர்வுகள் (கவிதைத் தொகுப்பு)/மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, வானத்தின் அமைதி குலைகிறது (கவிதைத் தொகுதி)/வல்வைக்கமல், மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைத் தொகுப்பு)/சிவனு மனோஹரன், கோப்பாய் சிவம் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு)/கோப்பாய் சிவம், தழும்பு (நாவல்கள்)/மா.பாலசிங்கம், சித்திரக் கவித்திரட்டு (ஆய்வு)/ஞானம் பாலச்சந்திரன், செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (புனைவுக்கட்டுரைகள்)/ஆ.சி.கந்தராஜா, திரைமறைவுக் கலைஞர்கள் (ஓர் அனுபவப் பகிர்வு)/எஸ்.நடராஜன், கட்டுப்பொல் (நாவல்)/பிரமிளா பிரதீபன், சிந்தனைப் பூக்கள்-பாகம் 5 (கட்டுரைத் தொகுப்பு)/எஸ்.பத்மநாதன் ஆகிய நூல்களுக்காக இம்முன்னுரைகள் எழுதப்பட்டிருந்தன.