13846 திறன்நோக்கு: நூல்கள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.

ஏ.பீர் முகம்மது. திருக்கோணமலை: கலாசாரத் திணைக்களம் -கிழக்கு மாகாணம், திருக்கோணமலை, 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: ஏ.ஆர்.ரீ.பிரின்ரர்ஸ், 82, ரீ.ஜீ.சம்பந்தர் வீதி).

147 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-4628-22-9.

ஏ.பீர் முகம்மது அவர்களின்  நூல்விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல். இவை முன்னர் செங்கதிர் சஞ்சிகையில் விசுவாமித்திர பக்கம் என்ற பகுதியில் பிரசுரமானவை. செங்கதிரில் இவற்றை இரண்டாம் விசுவாமித்திரன் என்ற புனைபெயரிலேயே ஆசிரியர் எழுதிவந்தார். எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள், மனதில் உறுதி வேண்டும், பேரா.கா.சிவத்தம்பி: ஒரு புலமையின் சகாப்தம், விடியலைத் தேடி, குருதி தோய்ந்த காலம், ஓ அவனால் முடியும், நிஜங்களின் தரிசனம், வெள்ளி விரல், சொடுதா, இன்னுமோர் உலகம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், முதுசம், தோட்டுப்பாய் மூத்தம்மா, ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை, கூடுகள் சிதைந்தபோது, மருதமுனை முத்து மஷ_ர் மௌலானா, கண்ணீரினூடே தெரியும் வீதி, மனக்காடு, அரசியல் சிந்தனையும் சமூக இருப்பும், இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள், இப்படியுமா? ஆகிய 21 தலைப்புகளில் எழுதப்பட்ட திறன்நோக்குக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17506 அன்பின் முத்தங்கள்.

வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  100 பக்கம், விலை: ரூபா 600., அளவு: