13847 நந்தியின் நாவல்களில் சமூக நோக்கு.

ம.இரகுநாதன். யாழ்ப்பாணம்: நினைவுப் பேருரைக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).

33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

29.06.2016 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில்  நிகழ்த்தப்பெற்ற பேராசிரியர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்களின் நான்காவது நினைவுப் பேருரையின் எழுத்துவடிவம் இது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட சமூக மருத்துவப் பேராசிரியராகவும் மருத்துவபீட பீடாதிபதியாகவும் கடமையாற்றியவர் பேராசிரியர் நந்தி. 1979இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட முதலாவது மருத்துவ பீடப் பேராசிரியரும் இவரே. சிறந்த இலக்கியவாதியான இவரது படைப்பாக்கங்கள் சிறப்புப்பெற்றவை. மலைக்கொழுந்து, தங்கச்சியம்மா, நம்பிக்கைகள் ஆகிய நாவல்ளையும் 50 சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.  இதில் இரு நாவல்கள் சாகித்திய மண்டலப்பரிசு பெற்றவை. மேலும் நான்கு சுகாதார நூல்கள், சிறுவர்களுக்கான அறிவுரை நூல்கள், நாடக நூல் எனப் பதினான்கு நூல்களின் ஆசிரியர் இவர். மலைக்கொழுந்து, தங்கச்சியம்மா, நம்பிக்கைகள் ஆகிய இவரது நாவல்களில் காணப்படும் சமூகநோக்கு பற்றியதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் எம்.ரகுநாதனின் விரிவான பேருரை அமைந்துள்ளது. பேராசிரியர் ம.ரகுநாதன் முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர். சில ஆண்டுகள் அங்கு ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

200 Voor Spins Zonder Stortin Casino’s 2024

Capaciteit Dingen Ontvang Ik Gij Minst Gratis Spins Behalve Betaling Afwisselend Nederlan? Kloosterzuster Deposit Bonussen Nederland: Bonus Behalve Stortin 2024 Fre Spins Voor Offlin Videoslots

Coin Master Free Revolves

Blogs Perfect for Cellular Players Just how can A 100 Free Spins Functions? 100 percent free Revolves Subscribe Incentive In the Casinos on the internet