அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, இல.1, ஓடைக்கரை வீதி, குருநகர், 1வது பதிப்பு, மே 2016. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
iv, 136 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-3989-00-0.
ஜீவநதி இதழில் வைகாசி 2014 முதல் மார்கழி 2015 வரை எழுதப்பட்ட நினைவுக் குறிப்புத் தொடர் இது. கலை இலக்கியப் படைப்பாளி, விமர்சகர், யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான அ.யேசுராசா அனுபவம் மிக்கதொரு இலக்கியவாதியாவார். அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து தீவிர இலக்கிய ஆர்வலராகவும், இறுதிப் பகுதியில் கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தில் செயற்பாட்டாளராகவும் இயங்கியவர் இவர். அக்கழகக் காலம், கூரிய பார்வைகளை வெளிப்படையாகப் பரிமாறும் பயிற்சியை இவருக்களித்தது. இலங்கையின் பல பிரதேசங்களிலும் உள்ள கலை இலக்கியவாதிகள் பலருடனான தொடர்புகள், கலந்துரையாடல்கள், சிற்றிதழ்ச் செயற்பாடுகள், கருத்தரங்குகள், திரைப்படக் கழகச் செயற்பாடுகள், தமிழக-ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கான பயணங்கள் என்பவை மகிழ்வும் கசப்புகளுமென நிறைய அனுபவங்களை இவருக்கு அளித்திருந்தன. அவ்வனுபவங்களை சுவையாக இத்தொடரில் ஜீவநதி வாசகர்களுடன் பகிர்ந்திருந்தார். அத்தொடரின் விரிந்த வாசிப்பை நோக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது.