13854 பிரகாசம்: அரச ஊழியர்களது இலக்கிய ஆக்கங்கள் 2006.

சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்), சுபாசினி சிவபாலசிங்கம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாசார மேம்பாட்டுப் பிரிவு, கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் அமைச்சு, எட்டாம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (கொழும்பு 8: அரசாங்க அச்சகத் திணைக்களம்).

x, 270 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9117-08-4.

கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்களான, சுபாசினி கேசவன், சுபாசினி சிவபாலசிங்கம் ஆகியோரை பதிப்பாசிரியர்களாகக்கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் வெளிப்பாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்திவரும் போட்டித் தொடரில் 2006ஆம் ஆண்டுக்கான போட்டியில்  பரிசுபெற்ற கவிதைகள், சிறுகதைகள், பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதே திட்டத்தின்கீழ் சிங்கள மொழியிலும் பிரபாஸ்வர என்ற பெயரிலும் கடந்த சில ஆண்டுகளாக நூல்தொடர் ஒன்று வெளியாகியுள்ளது. 13 பாடல்களும், 13 சிறுகதைகளும், 13 கவிதைகளும், 3 மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர் கதை ஆக்கத்தில் வெற்றிபெற்றோர் விபரமும், சிறுவர் கதை ஆக்கத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றோரின் விபரமும், கவிதை ஆக்கத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றோரின் விபரமும், சிறந்த ஆக்கங்களுக்கான பாராட்டைப் பெறுவோர்  விபரமும்; பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 066371).

ஏனைய பதிவுகள்

Classic Slots twin spin casino

Blogs How many times Do A slot machine game Commission? You Sure, You can Enjoy The newest Totally free Harbors Video game Here Finest Rtp