13857 இலங்கை வரலாறு: பிரித்தானியர் ஆட்சிக்காலம்: 1796-1948.

சி.எஸ்.கதிர்காமநாதன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 1967. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

(9), 10-228 பக்கம், விலை: ரூபா 4.50, அளவு: 21×14 சமீ.

கல்விப்பொதுத் தராதரப் பத்திர வகுப்புகளுக்குரியது. இதில் இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றமுன்னர் பிரித்தனியருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள், பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தால் இலங்கையிலுள்ள ஒல்லாந்தப் பிரதேசங்கள் கைப்பற்றப்படல், கடற்கரைப்பிரதேசங்களில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தின் ஆட்சி (1796-1802), ஆள்பதி பிரடறிக் நோத் அவர்களின் ஆட்சி, முதலாவது கண்டிப் போர், ஆள்பதி  சேர். தோமஸ் மெயிற்லந்து அவர்களின் ஆட்சி, கண்டி கைப்பற்றப்படல், 1815-ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கை, 1817ஆம், 1818ஆம் ஆண்டு கண்டிக் கலகம், 1817ம், 1818ம் ஆண்டுக் கண்டிக் கலகத்தின் விளைவுகள், ஆள்பதி எட்வேட் பாண்ஸ், அவர்களின் ஆட்சி, கோல்புறூக் ஆணைக்குழுவின் எடுத்துரைகள், 1848-ம் ஆண்டுக் கண்டி விவசாயிகளின் கலகம், பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி (1831ம் ஆண்டுக்குப் பின்னர்), விடுதலைப் போராட்டங்களும் ஹென்றி எட்வேட் மக்கலம் அவர்களின் சீர்திருத்தங்களும், விடுதலைப் போராட்டங்களும், சேர். வில்லியம் ஹென்றி மனிங் அவர்களின் சீர்திருத்தங்களும், மோர்லி-மின்ரொ சீர்திருத்தங்கள், மொந்தேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள், டொனமூர் அரசமைப்பு, சோல்பரி அரசமைப்பு, இலங்கை சுயாட்சிப் பாதையில் ஆகிய 19 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48432).

ஏனைய பதிவுகள்