வை.சிவசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: வை.சுப்பிரமணியம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
54 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
Lessons in Geography for Standard III என்ற ஆங்கிலத் தலைப்பில் வெளியாகியுள்ள தமிழ் நூல். ஆண்டு மூன்றுக்குரிய புதியபாடத்திட்டத்திற்கமைவாக, சூரியன், காற்று, மழை, என்பவற்றை அவதானித்தல், பகல், இரவு, திக்குகள், கண்டங்கள், சமுத்திரங்கள், ஆகியவற்றின் அமைவிடம் பற்றிய அறிதலுக்காக பூகோள உருண்டையை ஆராய்ந்தறிதல், மக்களின் வீடுகள் எங்குள்ளன, அவர்கள் உணவுப்பொருள்களை எங்கே பெறுகின்றனர் என்பவற்றைக் காட்டும் சுலபமான பாடசாலைப் பிரிவுப் படம், உணவு உடை வீடு என்பவற்றை உருவாக்கும் பல்வேறு மாந்தரைப் பற்றிய கதைகள் என்பன இந்நூலில் 22 பாடங்களிலும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84666).