தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 132 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8354-84-1.
விமான நிலையத்தில் ஏற்பட்ட விசித்திர அனுபவம், ஈழத்தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்வதற்கு கனடா நாட்டைத் தெரிவுசெய்தது ஏன்?, கனடாவின் தமிழ்த் தேசிய கீதத்தை இயற்றிய ஈழக் கவிஞர், கனடிய அரசு வழங்கும் வழிபாட்டுச் சுதந்திரமும் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களும், ஈழத்தமிழர்களின் கேந்திர இடமாக அமைந்த ரொறன்ரோ நகர், நிலக்கீழ் அறையை பிரதான இடமாகக் கொண்டியங்கும் கனடா வீடுகள், கனடாவின் அற்புதம்: உலகப் புகழ்பெற்ற நயகரா நீர்வீழ்ச்சி, அற்புதக் காட்சிகள் நிறைந்த நயகரா தாவரப் பூங்காவில் ஆச்சரியம் தரும் வண்ணத்துப் பூச்சிகள் வளர்ப்பகம், இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் தமிழில் ஆற்றிய பாராளுமன்றின் கன்னிப் பேச்சு, கனடா பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் அற்புதக் காட்சிகள், கனடா தலைநகரில் வருடாவருடம் இடம்பெறும் உலகின் மிகப்பெரிய ரூலிப் மலர்விழா, கனடா போர் அருங் காட்சியகத்தில் சர்வாதிகாரி ஹிட்லர் பாவித்த கார், உயர்தரத்தில் விளங்கும் கனடாவின் சுற்றுலாத்துறை, மொன்றியல் நகரில் உலகப் புகழ்பெற்ற பசிலிக்கா புனித கிறிஸ்தவ தேவாலயம், கனடா ஒலிம்பிக் கிராமத்தில் உலகிலேயே உயரமான சாய்ந்த கோபுரம், கனடாவில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் ஒரு பிரெஞ்சு நகரம், பழைமைமிக்கதும் இயற்கைக் காட்சிகள் நிறைந்ததுமான கிங்ஸ்ரன் நகர், கனடாவில் ஆச்சர்யம் தரும் ஆயிரம் தீவுகள், பல்லின மக்கள் வாழும் கனடாவில் தமிழ் மாணவர்களுக்கான கல்வி வசதிகள், கனடாவில் ஈழத்தமிழ் இளந்தலைமுறையினரிடம் கலையார்வம், கனடாவில் புத்தூக்கம் பெறும் நாட்டார் கலைகள், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் சி.என்.கோபுரம், ரொறன்ரோ நகரில் கண்கவர் காட்சிக்கூடங்கள், கனடாவில் உயர்ந்த தரத்தில் திகழும் புலம்பெயர் இலக்கிய முயற்சிகள் ஆகிய 24 தலைப்புகளில் இப்பயணத்தொடர் எழுதப்பட்டுள்ளது.