13869 அறிவின் தேட்டம்: அமரர் திருமதி சிவனேஸ்வரி ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களின் நினைவஞ்சலி மலர்.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் மு.ஸ்ரீ விக்கினேஸ்வரன் குடும்பத்தினர், ஈஸ்வர இல்லம், மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 114 பக்கம், புகைப்படங்கள், தகடு, விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவரும் அமரர் முத்துத்தம்பி ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களின் துணைவியாருமாகிய அமரர் திருமதி சிவனேஸ்வரி ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களின் நினைவஞ்சலி மலர். உறவினர்களின் அஞ்சலி உரைகள், திருமுறைப் பதிகங்கள் ஆகியவற்றுடன் வெளிவந்துள்ள இம்மலரில், யாழ்ப்பாணத்துச் சமையல் (வித்துவான் க.ந.வேலன்), முருகப் பெருமானின் விரதங்களும் விழாக்களும் (சாந்தி நாவுக்கரசன்), கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தானம்: ஒரு வரலாற்றுக் குறிப்பு (என்.செல்வராஜா) ஆகிய மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. அமரர் திருமதி சிவனேஸ்வரி ஸ்ரீவிக்கினேஸ்வரன், நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் மூத்த சகோதரியாவார்.

ஏனைய பதிவுகள்

17037 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 29ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஆண்டறிக்கை (1970-1971).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10) பக்கம், விலை: