கலாநிதி ஜீவகுமாரன் (தொகுப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xiv, 293 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ.
திருமதி சொர்ணலட்சுமி சேதுகாவலர் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலியின்போது 15.12.2017 அன்று வெளியிடப்பட்ட நூல். தன் தாய் தந்தையர் இருவரதும் வாழ்க்கை வரலாற்றை ஒரு இலக்கியச் சுவைமிக்க நவீனமாக எழுதியுள்ளார் திருமதி கலாநிதி ஜீவகுமாரன். யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவில் வாழ்ந்திருந்த கணபதிப்பிள்ளை, சுந்தரம், வேலுப்பிள்ளை, விசாலாட்சி ஆகிய நான்கு பேரினதும் வாழ்வின் ஓட்டமும் அந்த ஓட்டத்தில் பெற்றெடுத்த பிள்ளைகள், வீட்டுக்கு வந்த மருமக்கள்,அவர்களின் வழித்தோன்றல்களான பேரப்பிள்ளைகள், என முதலாவது பூட்டப் பிள்ளையின் தோற்றம்வரை நடந்த அஞ்சல் ஓட்டம்தான் இந்த நவீனம். இது 88ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62952. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 053490).