சாரல்நாடன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
51 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
தேசபக்தன் கோ.நடேசையரின் துணைவியான மீனாட்சியம்மாள் மலையகத்தின் முதற்பெண்மணி எனக் கருதக்கூடிய தகுதி பெற்றவர். தேசபக்தன் பத்திரிகையில் ஐயரோடு சேர்ந்து பணியாற்றியவர். அப்பத்திரிகைக்கு ஆலோசனை வழங்குபவராக முதலில் பணியாற்றியவர். 1929இல் தேசபக்தன் பத்திரிகைக்கு மீனாட்சியம்மாள் பொறுப்பாசிரியரானார். அவரது திறமையால் தேசபக்தன் தினப்பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. மீனாட்சியம்மாள் கவிதைத்துறையில் ஈடுபாடுகொண்டவராக விளங்கினார். தேசபக்தன் பத்திரிகையில் பல அறிவியல்சார்ந்த விடயங்களையும் அவர் கட்டுரைகளாக எழுதியுள்ளார். தேசபக்தன் பத்திரிகையில் பெண்கள் முன்னேற்றத்துக்கான கருத்துக்களையும் அவர் எழுதியுள்ளார். மலையகம் எங்கும் தனது கணவனுடன் சென்று பல எழுச்சிப் பாடல்களைப்பாடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மீனாட்சியம்மாளின் வாழ்வும் பணிகளும் பற்றிய ஒரு வெட்டுமுகத்தை இந்நூல் தருகிறது.