13881  சிறுவருக்கு சுவாமி விபுலானந்தர்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×18 சமீ., ISBN: 978-955-1997-39-7.

சுவாமி விபுலானந்தர்: ஓர் அறிமுகம், கல்வி, ஆசிரியர் மயில்வாகனம், விரிவுரையாளர் பண்டிதர் மயில்வாகனம், அதிபர் பண்டிதர் மயில்வாகனம் பி.எஸ்.சி., ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கம், பத்திரிகை ஆசிரியராக பிரபோத சைத்தன்யர், சுவாமி விபுலானந்தா, இலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகள், சிவானந்த வித்தியாலயம், இந்துக் கல்வி முறையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், பிரபுத்த பாரதத்தின் ஆசிரியர், மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், யாழ் நூல் அரங்கேற்றம், ஒரு வரலாறு முடிந்தது ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர்களுக்குத் தெளிவாக வழங்குகின்றது. இந்நூல் 040ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்