13883 தேரடிச் சித்தர்: செல்லப்பா சுவாமிகள் குருபூசை வெளியீடு.

ஏ.செல்லத்துரை சுவாமிகள். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (யாழ்ப்பாணம்: போஸ்கோ அச்சகம், இல. 252, பருத்தித்துறை வீதி).

56 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாணத்தின் நல்லூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம்- நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்;. இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலங் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின் படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றி, பலமுறை களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் பதிற்கடமை புரிந்தார். காலக்கிரமத்தில் உள்ளத்தில் ஊற்றெடுத்து வந்த ஞான நாட்டங் கொண்டமையால் செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. உள்ளே ஊறிவந்த ஒருவகை ஞானப்பெருக்கு, வெளியே வழியத்தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும், குழந்தை போலவும் இருந்தது. செல்லப்பா சுவாமிகள் வெளியே உலகத் துறவில் விசர்க்கோலமும், உள்ளத்திலே ஒடுக்கமும் ஞான நாட்டமும் சிந்தனையுங் கொண்டு, நல்லூரான் திருவருள் வெள்ளத்தில் நாளும் நனைந்து மூழ்கியிருந்த காலத்திலே, நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வையும் தீட்சையும் உபதேசமும் கிடைத்தன. குருவருள் பெற்ற பேற்றினாலே புறக்கோலம் நீங்காமலே அந்த கரணசுத்தி பெற்று, பசுகரணங்கள் பதிகரணங்களாக மலரப்பெற்றார். முன்னர் மூலையில் முடங்கிக்கிடந்தவர், குருவருட் பிரகாசத்தாலே தேரடியில் வந்து குந்தியிருந்து யாவருந் தரிசிக்கக் கூடியவராயிருந்தார். உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த செல்லப்பா சுவாமிகள், வெளியுலகத்தவருக்கு விசரனாகவும், ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். இந்நூலில் யோகர் சுவாமிகளின் குருவான இந்தச் செல்லப்பா சுவாமிகள் பற்றி பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தாது வருடம் பங்குனித் திங்கள் அச்சுவினி நாளில் (08.04.1997) ஈழத்துச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் குருபூசை தினத்தன்று இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34595).

ஏனைய பதிவுகள்

Przebój Casino Stolica polski

Content Jakie Będą Minimalne Oraz Maks. Zapłaty Dzięki Uciechy W Przebój Internetowego Casino? Jakie Uciechy Pferowane Są W całej Hit Casino? Zabawy Na wyłączność Jak