13885 நாவலர் நறுமலர்: சிறப்பு மலர்-ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு-2016.

க.இரகுபரன், ஸ்ரீபிரசாந்தன், மு.கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(20), 378 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 24×17.5 சமீ.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 30 ஆண்டு நிறைவையொட்டி 2016, நவம்பர் 18 முதல் 21ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாநாட்டினை யொட்டி  இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றியல் பிரிவில் ஆறுமுக நாவலர் தோன்றிய சூழல் (ஆ.வேலுப்பிள்ளை), சரித்திரத்தில் நாவலரின் பாத்திரம் (பிரேம்ஜி), நவீன இந்துமத சிந்தனையாளர் வரிசையில் ஆறுமுக நாவலர் (வி.சிவசாமி), நாவலரின் இந்தியப் பிரயாணங்கள் (மு.இராமலிங்கம்), இலங்கையில் கிறிஸ்தவ மிஷனரிகளும் ஆறுமுக நாவலரும் (சி.பத்மநாதன்), ஆறுமுக நாவலர் வரலாற்றின் சிறப்பம்சங்கள் (பொ.பூலோகசிங்கம்) ஆகிய கட்டுரைகளும், சமயவியல் பிரிவில் சைவத்தைக் கைதூக்கி விடுவதற்கு அவதரித்த நாவலர் பெருமான் (பெரியதம்பிப்பிள்ளை), சைவசமய மறுமலர்ச்சியில் ஆறுமுக நாவலர் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), தமிழர் சமயப் பாரம்பரியத்தில் நாவலர் (மௌ.சித்திரலேகா), சைவசித்தாந்த மெய்யியலில் ஆறுமுக நாவலரின் பங்களிப்பு (இரா.வை.கனகரத்தினம்) ஆகிய கட்டுரைகளும், தமிழியல் என்ற பிரிவின் கீழ் நாவலர் அடிச்சுவட்டில் இலக்கியம் (சி.தில்லைநாதன்), உரைநடைக்கு ஒருவர் ஆறுமுக நாவலர் (சொக்கன்), 19ஆம் நூற்றாண்டு நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும் (எம்.ஏ.நுஃமான்), ஆறுமுக நாவலர் பதிப்புகள் (மோ.கோ.கோவைமணி), பதிப்பாசிரியர் நாவலர் (க.கைலாசபதி), பதிப்பாள மன்னன்: விமரிசனங்கள் தொடர்பான பார்வை (ஸ்ரீ பிரசாந்தன்), ஆறுமுக நாவலர் செய்த பைபிள் மொழிபெயர்ப்பு (சோ.பத்மநாதன்), ஆறுமுக நாவலர்: 1850 அளவில் சைவப்பிரசங்க மரபும் சமயத்தின் நிர்ணயமும் (பேர்னாட் பேற்), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரும் வரலாற்று நாடக மூலவரும் (செ.து.தெட்சணாமூர்த்தி) ஆகிய கட்டுரைகளும்,  கல்வியியல் பிரிவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் கல்வி மறுமலர்ச்சி (ப.சந்திரசேகரம்), நாவலர் தொடக்கிவைத்த சைவசமயக் கல்வி மறுமலர்ச்சி (வ.ஆறுமுகம்), நாவலர் அடிச்சுவட்டில் கல்வி (எம்.எம்.சமீம்), நாவலர் கல்வி மரபும் இன்றைய தேவையும் (இ.குமாரவடிவேல்), நாவலர் தாபித்த வண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலை (சி.கணபதிப்பிள்ளை), நாவலர் தாபித்த சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை (எஸ்.பத்மினி கபாலிமூர்த்தி), சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேனிலைப் பள்ளி (சு.அருள்மொழிச் செல்வன்) ஆகிய கட்டுரைகளும், சமுதாயவியல், என்ற பிரிவின்கீழ் நாவலரும் வேளாண்மையும் (ச.தனஞ்சயராசசிங்கம்), 19ஆம் நூற்றாண்டு இலங்கையில் கிறிஸ்தவ மத மாற்றுகைக்கும் மேற்கு மயமாக்கலுக்குமான இந்துக்களின் எதிர்வினை (கா.சிவத்தம்பி), நாவலரை முன்னிறுத்தி இனக்குழுமக் கோட்பாடு (சபா.ஜெயராசா) ஆகிய கட்டுரைகளும்,  பொதுவியல் என்ற பிரிவின்கீழ் விஜயத் துவஜம் (சுவாமி விபுலானந்தர்), ஆறுமுக நாவலர் (அ.சின்னத்தம்பி), ஆறுமுக நாவலர் (ஏ.வி.சுப்பிரமணிய ஐயர்),  நாவலர்  நிலைநாட்டிய சாதனைகள் (சு.வித்தியானந்தன்), நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் (சி.க.சிற்றம்பலம்), நாவலரும் செந்திநாதையரும்: ஒரு ஒப்பீட்டு ஆய்வு (யோகேஸ்வரி கணேசலிங்கம்), மேனாட்டுப் பாதிரிமார் பார்வையில் ஆறுமுக நாவலர் (எஸ்.ஜெபநேசன்), நாவலர்  பிரபந்தத்திரட்டு ஊடாக நாவலரை விளங்கிக்கொள்ளல் (க.இரகுபரன்) ஆகிய கட்டுரைகளுமாக மொத்தம்  37 நாவலர் சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62106).

ஏனைய பதிவுகள்

10145 பத்தாவது உலக சைவ மாநாடு: 27-29 ஜனவரி 2006, சிட்னி, அவுஸ்திரேலியா.

மலர்க் குழு. அவுஸ்திரேலியா: சைவ மன்றம், மாநாட்டுச் செயலகம், Great Western Highway, Mays Hill, NSW 2145, Australia, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (சிட்னி: seven Imaging). (54), 166+86  பக்கம்,

Gonzos Trip Slot Netent

Content Where you can Gamble Gonzo’s Trip Gambling establishment Slot? – have a glimpse at the link Gambling enterprises To the Better Bonuses For the

レプラコーン スロット KA Playing 最高のオンラインカジノjapanリアルマネー のオンライン カジノ ゲームをお楽しみください

コンテンツ ジャックポットビルダー – 最高のオンラインカジノjapanリアルマネー レプラコーン ラッキー アピール スロット FAQ Leprechaun’s Fortune Dollars Assemble には追加機能がありますか? 良いチャンスのアイコン このラウンドでは、井戸に関するゴールドからスタックを集めることができれば、最新のプログレッシブ ジャックポットを獲得することもできます。私たち自身が必要とする新鮮なカジノに参加して、新鮮なポジションゲームを試してみてください。そして、2025 年を所有するための知識豊富なウェルカム追加ボーナスも提供しています。最大 10 倍の完全に無料の回転を実現するために、最新のゴールド スキャッター サインのポットを所有してください。名誉乗数。インターネット上の当社独自の最高のカジノでレプラコーン ラッキー アピールをギャンブルすると、無料のリボルブを獲得できます。 Leprechaun’s